நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 2 பேர் பலி


நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 2 பேர் பலி
x

நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 2 பேர் பலி

விருதுநகர்


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் மாரிராஜா (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகருக்கு சவாரி வந்துவிட்டு இரவு 9 மணியளவில் பந்தல்குடிக்கு திரும்பி கொண்டிருந்தார். விருதுநகர் ஆர்.ஆர். நகர் சோதனை சாவடி அருகே 65 வயது மதிக்கத்தக்க நபர் சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் அவர் மீது மோதாமல் இருக்க மாரிராஜா ஆட்டோவை வலதுபுறமாக திருப்பினார். அப்போது ஆட்டோ அந்த நபர் மீது மோதியதுடன் கவிழ்ந்தது.

இதில் மாரிராஜா கவிழ்ந்த ஆட்டோவின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோ மோதி படுகாயம் அடைந்த நபர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் மாரி ராஜாவின் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story