ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி


ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
x

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலியாளார்

திருச்சி

துவரங்குறிச்சி, ஜூன்.5-

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்

வளநாடு அருேக உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். வளநாடு பெரியகுளம் கருப்பண்ணசாமி கோவில் அருகே சென்ற போது வளநாட்டைச் சேர்ந்த இஸ்மாயில் முகம்மது மீரா (50) ஓட்டி வந்த ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதின.

இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இஸ்மாயில் முகம்மது மீரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story