திருக்கோவிலூர் அருகேஆட்டோ கவிழ்ந்து விபத்துமாணவர் உள்பட 7 பேர் காயம்


திருக்கோவிலூர் அருகேஆட்டோ கவிழ்ந்து விபத்துமாணவர் உள்பட 7 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து மாணவர் உள்பட 7 பேர் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரணாம்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 13 பேர்களை ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று புறப்பட்டது. ஆட்டோவை வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (வயது 41) என்பவர் ஓட்டினார். திருக்கோவிலூர் செவலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே நாய் ஓடியுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க, ராஜ்குமார் ஆட்டோவை பிரேக் பிடித்து நிறுத்தினார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தோஷ்( 13), ராஜ்குமார், ரேணுகா (60), விமலாதேவி (35), மலர் (37), பிரமிளா(18), மும்தாஜ் (37) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் சந்தோஷ் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story