ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் படுகாயம்


ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
x

ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தவசெல்வம். அவருடைய மனைவி ரமா (வயது 30). இவருடைய உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதனால் அந்த துக்க வீட்டுக்கு செல்வதற்காக ரமா, தனது மகன் சச்சின் (3) மற்றும் அதே ஊரை சேர்ந்த சிலருடன் நேற்று கருவேல்நாயக்கன்பட்டியில் இருந்து பொன்னன்படுகைக்கு ஒரு ஆட்டோவில் புறப்பட்டார். ஆட்டோவை குன்னூரை சேர்ந்த மனோபாலன் (23) ஓட்டினார்.

குன்னூர் வைகை ஆற்றுப்பாலம் அருகில் சென்ற போது, திடீரென ஆட்டோ நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரமா, சச்சின், அதே ஊரை சேர்ந்த செல்வி (39), பையம்மாள் (45), அன்னபுஷ்பம் (45), கருப்பாயி (60), துரைச்சாமி (70) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக ஆட்டோ டிரைவர் மனோபாலன் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story