ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
நாங்குநேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தில் இருந்து வள்ளியூருக்கு ஆட்டோ ஒன்றில் டிரைவர் உள்பட 5 பேர் நேற்று வந்து கொண்டிருந்தனர். நாங்குநேரி- வள்ளியூர் நான்கு வழி சாலையில் வாகைகுளம் அடுத்து சாஸ்தா கோவில் முன்பு வரும்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்தவர்களும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்தில் ஆட்டோ டிரைவர் சுதாகர் (வயது 30) பரிதாபமாக உயிர் இழந்தார். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story