தூத்துக்குடியில்ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு


தூத்துக்குடியில்ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
x

தூத்துக்குடியில்ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர், சுனாமி காலனியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 28). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் சிலுவைபட்டியில் இருந்து அழகாபுரி நோக்கி ஆட்டோவை ஓட்டி சென்றாராம். அப்போது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story