நாமக்கல்லில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

நாமக்கல் பூங்கா சாலையில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்வேலவன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும், நல வாரியத்தின் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜேபி, நகர துணை செயலாளர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story