ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

மோட்டார் வாகன புதிய சட்டம் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

ஆட்டோ தொழிலாளர்கள்

சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்

டெல்லி, மராட்டியம் மாநிலம் போன்று, தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும். மோட்டார் வாகன புதிய சட்டம் அமல்படுத்தக்கூடாது. தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஆட்டோக்கள் வாங்குபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story