ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சிவராஜ், சங்கத்தின் செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தினசரி 5 லிட்டர் எரிபொருளை மானிய விலையில் வழங்க வேண்டும். கேரளாவை போன்று ஆட்டோவிற்கு இணையவழி செயலியை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட, மாநில எல்லையில் குறிப்பிட்ட தூரம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தினர்.


Next Story