ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினார். தமிழ்நாட்டில் ஆட்டோ தொழிலாளிக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்திட வேண்டும். ஸ்பார்ட் பைன் முறையை கைவிட வேண்டும். பைக் டாக்சி அனுமதியை ரத்து செய்திட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story