நாகர்கோவிலில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆன்லைன் அபராதம், ஸ்பாட் கட்டணம் முறையை கைவிட வேண்டும். காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது. 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும். மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். நல வாரியம் மூலமாக ஏழை ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். செயலாளர் சோபனராஜ், மாவட்ட நிர்வாகிகள் அந்தோணி, சிவகோபன், சி.ஐ.டி.யு. செயலாளர் தங்கமோகனன், ஜான்பேபி, மெஸ்லி பெல், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story