பெட்ரோல் விலையை குறைக்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலையை குறைக்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் உதயக்குமார், சுமைப்பணி சம்மேளன மாநில தலைவர் வெங்கடபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Next Story