காட்சிப்பொருளான தானியங்கி டிக்கெட் எந்திரங்கள்
கோவை ரெயில் நிலையத்தில் காட்சிப் பொருள் போல் தானி யங்கி டிக்கெட் எந்திரங்கள் உள்ளன. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கோவை
கோவை ரெயில் நிலையத்தில் காட்சிப் பொருள் போல் தானி யங்கி டிக்கெட் எந்திரங்கள் உள்ளன. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கோவை ரெயில் நிலையம்
கோவை ரெயில் நிலையம் வழியாக தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கு வரும் பயணிக ளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எனவே இங்கு பயணிக ளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதன் பயன் ரெயில் பயணிகளுக்கு முழுமையாக கிடைக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
குறிப்பாக கோவை ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாசல் பகுதியில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே 4 தானியங்கி டிக்கெட் எந்திரங்களும், பின்பகுதி நுழைவு வாசலில் ஒரு தானியங்கி டிக்கெட் எந்திரமும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. அவற்றை இயக்க ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.
தானியங்கி டிக்கெட் எந்திரங்கள்
இதனால் ரெயில் நிலையத்துக்கு அவசரமாக வரும் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் காத்திருக்காமல் தானியங்கி டிக்கெட் எந்திரத்தில் டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணம் செய்து வந்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தானியங்கி டிக்கெட் எந்திரத் தை இயக்க ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார். இதனால் மற்ற எந்திரங்கள் இயக்கப்படாமல் காட்சிப் பொருள் போல் உள்ளது.
இதன் காரணமாக முன்பதிவு இல்லா டிக்கெட் எடுக்க வரும் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதில் தாமதம் ஏற்படும் போது பயணிகள் ரெயிலை பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
ஊழியர்களை நியமிக்க வேண்டும்
ரெயில் நிலையத்தின் பின்புற வாசலில் இருக்கும் தானியங்கி டிக்கெட் எந்திரம் பழுதடைந்து உள்ளது. முன்புற வாசலில் 3 எந்திரங்கள் உள்ளன. இங்கு ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணி யில் உள்ளார்.
மற்ற 2 தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் பயன்படாமல் காட்சி பொருள் போல் உள்ளது. இதனால் பயணிகள் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்து அவதிப்பட வேண்டி உள்ளது.
ஊழியர் இல்லாத நிலையில் தானியங்கி எந்திரத்தை டிக்கெட் எடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
ஆனால் எடுக்கும் டிக்கெட்டிற்கு பணத்தை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் சிலர் எந்திரத்தை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்.எனவே தானியங்கி டிக்கெட் எந்திரத்தை இயக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
இல்லை என்றால் அந்த எந்திரத்தை பயன்ப டுத்தும் முறை குறித்த விளக்க புகைப்படத்தை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.