உழவர் சந்தை வளாகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம்


உழவர் சந்தை வளாகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம்
x

உழவர் சந்தை வளாகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.்

திருப்பத்தூர்

வாணியம்பாடி

உழவர் சந்தை வளாகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் உள்ள உழவர் சந்தை வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த எந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் அல்லது 5 ரூபாய் நாணயம் இரண்டு அல்லது கியூ ஆர் கோடு மூலம் 10 ரூபாய் செலுத்தினால் எந்திரத்தில் இருந்து ஒரு மஞ்சப்பை வெளிவரும்.

அதைத் தொடர்ந்து மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், தாசில்தார் சாந்தி, நகராட்சி பொறியாளர் சங்கர், வாணி டெக் நிர்வாக இயக்குனர் கே.இக்பால் அஹமத், மேலாளர் எம்.அப்துல்லா பாஷா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story