துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள்
மணல்மேடு, திருமங்கலம், குத்தாலத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
மணல்மேடு:
மணல்மேடு, திருமங்கலம், குத்தாலத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
நலத்திட்ட உதவிகள்
மணல்மேட்டில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பில் புதிததாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
துணை வேளாண்மை விரிவாக்க மையம்
இதேபோல் மணல்மேடு அருகே திருமங்கலம் கிராமம் மற்றும் குத்தாலம் ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இளையபெருமாள், சுரேஷ், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிசாமி, வேளாண்மை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வேளாண்மை துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.