அவனியாபுரம்: ஜல்லிக்கட்டுபோட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி 3 பேர் காயம்


அவனியாபுரம்: ஜல்லிக்கட்டுபோட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி 3 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Jan 2023 2:22 AM GMT (Updated: 2023-01-15T11:05:25+05:30)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அவனியாபுரம்,

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி இதுவரை 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போட்டிக்காக காளைகள் அழைத்து வரப்படும் போது முட்டியதில் உரிமையாளர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர். 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story