ஓசோன் படலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஓசோன் படலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ஓசோன் படலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்

அவினாசி

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை சார்பில் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதில் நமது பங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி முதல்வர்டாக்டர். ஜோ. நளதம், முன்னிலையில் விளக்கப்படத்துடன் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துனர். நிகழ்ச்சியை வணிகவியல் உதவிப் பேராசிரியர் முனைவர்.வி.சுசித்ரா ஒருங்கிணைத்தார். துறைத்தலைவர் டாக்டர்.பி.எஸ்.செல்வ தரங்கிணி இந்த நிகழ்ச்சிக்கான கருத்தை முன்வைத்து உருவாக்கியுள்ளார். விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்கச் செய்யும் வகையில், ஆன்லைன் விழிப்புணர்வு உருவாக்கும் கேள்வித்தாளை கல்லூரி முதல்வர் டாக்டர். ஜோ.நளதம், தொடங்கிவைத்தார்.. ஓசோன் படலத்தின் சிதைவை ஏற்படுத்தும் விஷயங்கள் மற்றும் ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள், ஓசோன் படலத்தை பாதுகாக்க தனிநபர்களும் மாணவர்களும் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று ஓசோன் படல பாதுகாப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் மேற்கண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.துறைத்தலைவர் டாக்டர்.பி.எஸ்.செல்வ தரங்கிணி இந்த நிகழ்ச்சிக்கான கருத்தை முன்வைத்து உருவாக்கியுள்ளார்.



Next Story