அவினாசியில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
அவினாசியில் சாலையோர கடைகளை முறைப்படுத்தக்கோரி அவினாசி நகர பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன.
சாலையோர கடைகளால் இடையூறு
திருப்பூர் மாவட்டம் அவினாசி நகர் புறத்தில் பெருகிவரும் சாலையோர கடைகளால் பெரும் விபத்துகளும், உயிரிழப்புகளும் அன்றாடம் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பல இடையூறுகள் ஏற்படுகிறது.
எனவே சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் பல கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு வைக்கப்பட்டது. இதன் பொருட்டு அவினாசி பேரூராட்சி மன்றம், சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றியது.
வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
இதையடுத்து கடந்த 1.10.2023 அன்று முதல் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவிதமான காரணமும் இன்றி சாலையோர கடைகளை முறைப்படுத்துவது செயல்படுத்தப்படவில்லை. எனவே அவினாசி பேரூராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரிஅவினாசி அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக 9-ந் தேதி (நேற்று) அன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். இது குறித்து வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டது.
கடைகள் அடைப்அவினாசியில் வியாபாரிகள்
கடை அடைப்பு போராட்டம்பு
அதனை ஏற்றுக்கொண்டு அவினாசி நகர் முழுவதும், வேலாயுதம்பாளையம்,ஆட்டையாம்பாளையம், கருனைபாளையம், காசிகவுண்டன்புதூர், முத்துசெட்டிபாளையம், ராஜன்நகர், கை காட்டிபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்திலுள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகை வியாபாரிகள், பேக்கரி, ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பேன்சி, இரும்பு, பெயிண்ட் கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும், கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்கள் நலன் கருதி மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் திறந்து இருந்தன. மொபட் மற்றும் சைக்கிளில் முக்கிய இடங்களில் டீ விற்பனை நடைபெற்றது.