அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
அவினாசி
அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது
இதை அடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
கார்த்திகேயன் 8. வது வார்டுஎந்த வேலை வந்தாலும் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு எப்போதும் தகவல் தெரிவிப்பதே இல்லை. அரசுத்துறை வேலைகள் எதுவும் தெரிவதில்லை. ஊருக்குள் வேலை நடப்பதை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இது மிகவும் வருந்தத்தக்கது. அவினசி ராஜன் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி கிடையாது. கழிவறை சுத்தம் செய்வது கிடையாது. கழிவறைக்குள் தண்ணீர் சேமிப்பு டேங்க் இல்லை. இதனால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. பல கூட்டங்களில் அரசு அதிகாரிகள் வருவதே இல்லை. மக்களைத் தேடி மருத்துவம் இன்று பெயரளவில் தான் உள்ளது. இது செயல்படுவதே இல்லை. இதையும் தாண்டி செவிலியர் இடத்தில் செல்லும் பொது மக்களைஅவர்கள் கவனிப்பதில்லை.கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆர்சிஎச் நம்பர் தருவதற்கு வீண் காலதாமதம் செய்கின்றனர்.என்றார்
சீனிவாசன் 11-வது வார்டுஉப்பிலிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் இருக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது
பதினைந்தாவது நிதிக்குழு மானியம் மணப்பாளையத்தில் பத்து மாதமாக பைப் லைன் விஸ்தாரிப்பு செய்யாமல்உள்ளதால் வீடுகளுக்கு பைப் லைன் வழங்கப்படாமல் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது என்றார்சேது மாதவன் 11 வது வார்டுபழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும் இங்கு சமுதாய நலக்கூடம் லிண்டன் வரை மட்டுமே கட்டி மூன்று வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை.பெரியாயிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு கழிப்பறை மற்றும் தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
மேலும் தேவன்பாளையம் சமுதாய நலக்கூடம் பழுதடைந்து எந்த நேரத்திலும் விழுந்து விடும் அபாய நிலையில் உள்ளது இவைகளை எல்லாம் உடனடியாக சீர் செய்ய வேண்டும்என்றார்.4. வது வார்டுபஞ்சலிங்கம் பாளையம் ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது எனவே அந்தப் பகுதியில் பொதுமக்கள் நலன் கெதி வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்அய்யாவு. 8. வதுதுலுக்க முத்தூர் நால்ரோடு முதல் ஊஞ்சபாளையம் வரையிலும் வடுகபாளையம் ஊராட்சி இழந்த குட்டை முதல் ஒட்ட பாளையம் வரை மற்றும் பச்சாம்பாளையம் முதல் ஆலமரம் வரை ரோடு மிகவும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது எனவே இந்த ரோடுகளை உடனடியாக புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் துலுக்க முத்தூர் மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைக்க வேண்டும் குப்பாண்டம்பாளையம் துலுக்க முத்தூர் அய்யம்பாளையம் வடுகபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை எடுக்க பேட்டரி வாகனங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்
கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில்பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த கல்வியாண்டில் 256 மாணவர்கள் பள்ளி இடைவிலகலாக இருந்ததை கலவித் துறையின் முயற்சியால் 108 ஆக அது குறைந்துள்ளது. எனவேவார்டு கவுன்சிலர் ஆகிய நீங்கள் அனைவரும் இதுபோல் பள்ளி விலைகளை கண்டறிந்து எங்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.