பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்


பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)

போகிப்பண்டிகையின்போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை தீவைத்து எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும் எரியும் புகையில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் போகிப்பண்டிகையின் போதுபழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story