தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலருக்கு தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்


தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலருக்கு  தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது  கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்
x

தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலருக்கு தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரிப்பட்டணம் ஒன்றிய தேசிய பசுமைப்படை செயலர் பவுன்ராஜிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தமிழக அரசின் "பசுமை முதன்மையாளர் விருது" வழங்கி ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் இவ்விருதை பெற்று சாதனை படைத்த முதல் ஆசிரியர் ஆவார். இவர் விளையாட்டுத்துறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முதலாக தமிழக அரசின் "டாக்டர் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர்) விருது" பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது, தமிழ்நாட்டிலேயே, விளையாட்டுத்துறை சார்பாக அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக அணியின் தலைமை மேலாளராகவும், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளைச் செயலராகவும் பணியாற்றி வருகிறார். தேசிய அளவில் மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story