பாலித்தீன் பைகளை பயன்படுத்தாத கல்வி நிறுவனம், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது


பாலித்தீன் பைகளை பயன்படுத்தாத கல்வி நிறுவனம், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது
x

பாலித்தீன் பைகளை முற்றிலும் பயன்படுத்தாத கல்வி நிறுவனம், வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை தவிர்த்து, மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தி வளாகங்களை தூய்மையாக வைத்துள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பம் திண்டுக்கல https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதில் தனிநபர் அல்லது நிறுவனத் தலைவர் கையொப்பமிட வேண்டும். மேலும் அந்த விண்ணப்பத்தின் 2 பிரதிகள் மற்றும் 2 குறுவட்டு பிரதிகளை கலெக்டர் அலுவலகத்தில் மே 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story