பரிசளிப்பு விழா


பரிசளிப்பு விழா
x

பாளையங்கோட்டை அருகே பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை அருகே பேரின்பபுரத்தில் மெர்சிராஜன் அசோசியேட் நிறுவனர் பிறந்தநாள் விழா மற்றும் பெட்ரோல் பங்க் பம்பர் பரிசு குலுக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் ஆனந்த் ஆரம்ப ஜெபம் செய்தார். மெர்சிராஜன் பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மெர்சிராஜன் அசோசியேட் ஜெ.சாமுவேல், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர், மூன்றடைப்பு துரை, ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சி.எஸ்.ஐ. திருமண்டல பெருமன்ற உறுப்பினரும், டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளருமான தேவா காபிரியேல் ஜெபராஜன் செய்திருந்தார்.


Next Story