கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்


கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது;  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்
x

ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விருது வழங்கினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விருது வழங்கினார்.

பரிசு

ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் மற்றும் இளையோர் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கலை பண்பாட்டு துறை சார்பில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அரசு இசைப்பள்ளியில் நடந்தது. விழாவில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு, கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகளும், இளையோர் கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

அதன்படி சிற்பக கலைஞர் கே.சி.ஆறுமுகம், தபேலா கலைஞர் மருதமுத்து, நாடக கலைஞர் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கலை முதுமணி விருதும் வழங்கப்பட்டது. தெருக்கூத்து கலைஞர் வீராசாமி, வாய்ப்பாட்டு கலைஞர் சுப்ரமணியன், நாதஸ்வர கலைஞர் இஸ்ரேல் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கலை நன்மணி விருதும், தவில் கலைஞர் மயில்வாகனன், மேடை நாடக கலைஞர் சரஸ்வதி, கிராமிய தப்பாட்ட கலைஞர் ராஜேந்திரன் ஆகியோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கலை சுடர்மணி விருதும் வழங்கப்பட்டது.

கலை இளமணி விருது

ஓவிய கலைஞர் ஷானவாஸ், தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி, வாய்ப்பாட்டு கலைஞர் தேவிப்பிரியா ஆகியோருக்கு ரூ.6 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கலை வளர்மணி விருதும், ஓவியர் நித்தியஸ்ரீ, குரலிசை கலைஞர் ஸ்ரீநிதி, வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் கல்லூரி முதலாம் ஆண்டு பிஸியோதெரபி மாணவியும், பரதநாட்டிய கலைஞருமான எ.ஆர்.சங்கவி ஆகியோருக்கு ரூ.4 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கலை இளமணி விருது வழங்கப்பட்டது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட 18 வயது முதல் 35 வயது வரையிலான இளையோருக்கான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற 15 பேருக்கு ரூ.3 ஆயிரத்து 500 பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை கோவை மண்டல உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி மற்றும் அரசு இசைப்பள்ளி மாணவ -மாணவிகள், இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story