பல்வேறு துறைகளில்சாதனை படைத்த குழந்தைகளுக்கு விருதுதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


பல்வேறு துறைகளில்சாதனை படைத்த குழந்தைகளுக்கு விருதுதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டா் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசு குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26-ந் தேதி வழங்கப்படுகிறது. புதுமை, கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்த குழந்தைகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதியுடைய 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புதிய ஒருங்கிணைந்த தேசிய இணையதளத்தில் https://awards.gov.in வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story