தியாகிகளின் வாரிசுகள் 40 பேருக்கு விருது


தியாகிகளின் வாரிசுகள் 40 பேருக்கு விருது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தியாகிகளின் வாரிசுகள் 40 பேருக்கு விருதுகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்

கோயம்புத்தூர்

75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு சார்பில் தியாகிகளின் வாரிசுகளை கவுரவித்தல், மரக்கன்றுகள் நடுதல், சிறந்த ஆசிரியர்கள், சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், முதியோர்கள், கோவை மாவட்ட தியாகிகள் சிறப்பு மலர் தொடங்குதல் ஆகிய ஐம்பெரும் விழா உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி தியாகிகளின் வாரிசுகளான தெலுங்குபாளையம் தக்ஷா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஆர்.எஸ்.சண்முகம் உள்பட 40 பேர் மற்றும் சிறந்த நல்லாசிரியை விருது ஆர்.எஸ்.மைதிலி, எஸ்.சித்ரா ஆகியோருக்கும், சிறந்த டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள், தொழில் முனைவோர், சமூக ஆர்வலர் கள், முதியோர்கள் உள்பட 75 பேருக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியை அஜிதா, ஆனந்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

முடிவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பின் செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம் நன்றி கூறினார்.


Next Story