நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது
மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை 2021-2022-ம் ஆண்டின் சிறந்த பள்ளிகளுக்கான விருதினை வழங்கியது. இதில் நெல்லை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக பாப்பாக்குடி யூனியனில் உள்ள நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அந்த பள்ளிக்கான கேடயத்தை பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரிகோரி, தலைமை ஆசிரியை ச.கோமா, ஆசிரியை ஆ.சண்முகசுந்தரி ஆகியோரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
விருது பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான் பாக்கியநாதன் மற்றும் பலர் பாராட்டினர்.
Related Tags :
Next Story