Normal
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு விருது
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.
கரூர்
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், பெரியவளையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி 2019-20-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் கற்றல் திறன், பள்ளி வளாக தூய்மை, கணினி வழிக்கற்பித்தல் மற்றும் சுற்றுச் சூழல் மன்றத்தின் சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக ேதர்வு செய்யப்பட்து. இதையடுத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், அந்த பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்செல்வியிடம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story