விபத்துகளை தடுப்பது குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு


விபத்துகளை தடுப்பது குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
x

தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகளை தடுப்பது குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகளை தடுப்பது குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது.

விழிப்புணர்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துகளை தடுக்க டிரைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

தொப்பூர் மலைப்பாதை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களை 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். வாகன ஓட்டிகள் மலைப்பாதையின் இறக்கத்தில் செல்லும்போது கியர் இல்லாமல் நியூட்ரலில் வாகனங்களை இயக்கக்கூடாது. அபாய கட்டத்தில் ஹேண்ட் பிரேக்கை டிரைவர்கள் விரைவாக பயன்படுத்த வேண்டும்.

இடைவெளி

மலைப்பகுதியை கடப்பதற்கு முன்பே கனரக வாகனங்களில் பிரேக் சரியாக செயல்படுகிறதா? என்பதை டிரைவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரேக்கை முறையாக பயன்படுத்தி வாகனங்களை இயக்க வேண்டும். சரக்கு வாகனங்கள் அடுத்த வாகனங்களை முந்தி செல்வதை தவிர்த்து இடதுபுறம் மட்டுமே செல்ல வேண்டும்.

ஒவ்வொரு வாகனத்துக்கும் இடையே 10 மீட்டர் இடைவெளியுடன் செல்ல வேண்டும். மதுபோதையில் வாகனங்கள் இயக்குவதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணிதர், ராஜ்குமார், கதிர்வேல், பயிற்சியாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story