பொதுமக்களுக்கு ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு


பொதுமக்களுக்கு ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிருஷ்ணகிரியில் பொதுமக்களுக்கு ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கையினை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி செல்பி எடுத்தும், கிருஷ்ணகிரியில் நடந்து வரும் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நவீன எல்.இ.டி. வாகனம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கோலத்தை நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரகுமார், உதயகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, சுகாதார துப்புரவு மேற்பார்வையாளர் ரேஷ்மா, கவுன்சிலர்கள் பாலாஜி, முகமதுஆஷிப், தேன்மொழி மாதேஷ், சீனிவாசன், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story