வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர்கள் வழங்கி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு
ஓசூரில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர்கள் வழங்கி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூரில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, ஓசூரில் போக்குவரத்து நிறைந்த தேன்கனிக்கோட்டை சாலை மற்றும் மத்திகிரி கூட்டுரோடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றவர்களுக்கும் மாணவ, மாணவிகள் ரோஜா மலர்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story