தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:15:45+05:30)

ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

தேசிய வாக்காளர் தினம் வருகிற 25-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் நாடகம், பேச்சுப்போட்டி, கோலம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை உதவி கலெக்டர் சரண்யா தொடங்கி வைத்தார். மேலும் கிராமப்பகுதிகளில் உள்ள 18 வயதான இளம் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இதில் தாசில்தார் கவாஸ்கர், தேர்தல் துணை தாசில்தார் மங்கையர்கரசி, சமூக சேவகி ராதா மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story