விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓசூரில் விபத்துகளை தடுக்க நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., மேயர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் பகுதியில் சாலை விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். விபத்தில்லா ஓசூர் மாநகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.மேலும் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை எமதர்மன் வேடமணிந்த நபர் மீது பாசக்கயிறு வீசி அழைத்து கொள்வேன் என நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story