நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில்தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில்தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

மகாத்மா காந்தி நினைவு தினமான நேற்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை யொட்டி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை தாங்கி, தொழுநோய் மற்றம் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் ஜெயந்தினி பேசும்போது, அடுத்த 2 வாரங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், தனியார் நிறுவனங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் தோல் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறினார்.

இதில் காந்தியவாதி ரமேஷ், மகாத்மா காந்தியின் சிந்தனைகள் குறித்து பேசினார். மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story