வெள்ளிச்சந்தையில்மின்சார வாகன பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி
பாலக்கோடு
பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் மின்வாரியம் சார்பில் மின்சார வாகனம் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் வனிதா முன்னிலை வகித்தார். தொடர்ந்து துணை மின் நிலையத்தில் இருந்து வெள்ளிச்சந்தை 4 ரோடு பகுதி வரை வாகன ஊர்வலம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்வாரிய பொறியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் மின் சிக்கனம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் விவசாயிகள், பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story