யாசகமாக திரட்டியரூ.10 ஆயிரத்தை போதை தடுப்பு விழிப்புணர்வுக்காக வழங்கிய முதியவர்


யாசகமாக திரட்டியரூ.10 ஆயிரத்தை போதை தடுப்பு விழிப்புணர்வுக்காக வழங்கிய முதியவர்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன் (வயது 73). இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கடந்த, 1980-ம் ஆண்டு முதல் மும்பையில் ஒரு கோவிலில் பூசாரியாக இருந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது முதல் தான் யாசகமாக பெறும் நிதியை பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், கல்வித்தொகை வழங்குவதற்காக கொடுத்து வருகிறார். கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அவர் தான் யாசகமாக பெற்ற தொகையை, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது வரையில் 36 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் யாசக தொகையில் ரூ.10 ஆயிரத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் வந்த அவர், 10 ஆயிரம் ரூபாயை போதை தடுப்பு விழிப்புணர்வுக்காக வங்கியில் செலுத்தி அதற்கான ரசீதை கலெக்டரிடம் கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் யாசகம் பெறும் பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புவது தெரிந்தவுடன் பல்வேறு தரப்பினரும் எனக்கு, 500, 1000 ரூபாய் என தாராளமாக வழங்குகின்றனர். என் உணவு, தேவைகள் போக மீதமுள்ள தொகையை முதல்-அமைச்சர் நிவாரண நிதி, பள்ளி மேம்பாடுக்காக வழங்கி வருகிறேன். இன்று கிருஷ்ணகிரியில் போதை ஒழிப்பு தின நடவடிக்கைகளுக்காக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளேன் என்று கூறினார்.


Next Story