அரியலூர் போக்குவரத்து போலீசார் சார்பில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு
அரியலூர் போக்குவரத்து போலீசார் சார்பில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எந்தவித வளைவுகளும் இல்லாமல் நேராக செல்வதால் அனைத்து வாகனங்களும் அதி வேகமாக செல்கின்றன. இதன்காரணமாக அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் மரணம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் வாரணாசி, சமத்துவபுரம், காந்தி நகர், திடீர் குப்பம் மற்றும் கீழப்பழுவூரை சேர்ந்த பொதுமக்களிடம் "விபத்தில்லா சாலை பயணம்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் நடைபெற்றது. இதில் தலைக்கவசத்தின் முக்கியத்துவம், மதுபோதை மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விபத்தினால் அவர்களது குடும்பத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தலைமை காவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர்.