வேளாண் திட்டங்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
குன்னத்தூர் கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆரணி
குன்னத்தூர் கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேற்கு ஆரணி வட்டாரத்தில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் குன்னத்தூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் வசிழிப்புணர்வு நடந்தது.
ஆரணி வேளாண்மை உதவி இயக்குனர் த.செல்லதுரை ஆலோசனைபட்படி வேளாண்மை அலுவலர் எஸ்.கீதா மேற்பார்வையில் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ஹரிதாஸ், ஒன்றிய குழு உறுப்பினர் பகுத்தறிவு மாமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள், சிறுதானிய ஆண்டிற்கான விவரம் மற்றும் சிறு தானியங்களின் பயன்கள், நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு முறை, கரும்பில் ஒரு பரு நாற்று நடவு முறை, நுண்ணீர் பாசனம் உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் விவசாயிகள் இடுபொருட்கள் முன்பதிவு உழவர் குழுக்களை ஊக்குவித்தல்போன்றவை குறித்து விவசாயிகளுக்கு நாடகம், கும்மி பாட்டு, தப்பாட்டம், கரகாட்டம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.