குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு


குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணலூர்பேட்டையில் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி

மணலூர்பேட்டை:

மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செல்லங்குப்பம் கிராமத்தில் நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீஸ்காரர்கள் தாமோதரன், கோகிலா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஓழிப்பு, போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் மணலூர்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தேர்வில் தோல்வியுற்றால் அதை எவ்வாறு எதிர்கொள்வது, காவல் உதவி செயலி எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story