தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு


தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு
x

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் கம்பத்தில் நடந்தது.

தேனி


தமிழகத்தில் குப்பை இல்லா கிராமங்களை உருவாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட, நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத் தேவன்பட்டி ஊராட்சியில் தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் செல்லையா தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நாராயணத்தேவன்பட்டியில் உள்ள பூங்காவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குப்பை மேலாண்மை குறித்தும், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story