ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் பள்ளியில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு


ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் பள்ளியில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு
x

ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளாப்பாக்கம் பேரூராட்சி சார்பில் தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் டி.வி.மனோகரன், செயல் அலுவலர் செ.முத்து ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

'தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்' என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதனையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு மரக்கன்றுகள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் எஸ்.ஜாய்ஸ் இன்பகுமாரி,என்.கோமதி, கல்லூரி முதல்வர் சி.எஸ்.சிவசக்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story