குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மேற்பார்வையில் ரெங்கநாதபுரம் கிராம மக்களிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, முதல்நிலை பெண் காவலர் சுமா, அரசின் ஒன் ஸ்டெப் மையத்தின் ஊழியர் பிரேமா மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோர் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story