பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுநடுவலூர் கிராமத்தில் நடந்தது. இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, ஏட்டு வெண்ணிலா ஆகியோர் கிராம மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். மேலும் அவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், பெண்கள் உதவி மேஜை இலவச தொலைபேசி எண் 112 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச தொலைபேசி எண் 14417 குறித்தும், முதியோர் உதவி இலவச தொலைபேசி எண் 14567 குறித்தும், சைபர் கிரைம் உதவி இலவச தொலைபேசி எண் 1930 குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வானிலை மாற்றத்தினால் மழை பெய்துவரும் நிலையில் இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் மரத்தடியில் நிற்பதை முற்றிலும் தவிர்த்து விடுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினா். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் பிள்ளைகளுக்கு மன வலிமை உண்டாக்கும் வகையிலும் அவர்களின் பிரச்சினைகளை தைரியமாக எதிர்த்து போராடும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மேலும் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.