டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு


டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு
x

டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

பெரம்பலூர்

மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒகளூர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேசு தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாசன், சுகாதார ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடா்ந்து ஒகளூர் பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது. இதேபோல் அத்தியூர், கழனிவாசல், திருமாந்துறை உள்ளிட்ட கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story