கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு
நெடுகுளாவில் கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே செம்மனாரை ஆதிவாசி கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில், தன் சுத்தம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், சங்கத்தின் பொறியாளர், கிராம வளர்ச்சி அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு நோய்கள் வராமல் பாதுகாக்க சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம் என்று விளக்கினர். மேலும் முறையாக கை கழுவுதல், சுயமாக தன்னை எவ்வாறு நோய்களில் இருந்து காத்துக் கொள்வது, இதற்கு தன் சுத்தம் முக்கியம் என குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து கைகளை சுத்தமாக கழுவும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story