ஊட்டச்சத்து கல்வி குறித்து விழிப்புணர்வு
ஊட்டச்சத்து கல்வி குறித்து விழிப்புணர்வு நடந்தது.
கரூர்
குளித்தலை நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து கல்வி குறித்தும், வளர் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரத்தசோகை பற்றியும் இம்மாதம் தொடக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கோவில்கள், திருமண மண்டபங்கள், ரேஷன் கடைகள், பள்ளிகள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் நேரடியாக சென்று ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் தீமைகள், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் எவை என்பதை குறிக்கும் வகையிலான பதாகைகளை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story