போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
புன்னம் சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் வேலாயுதம்பாளையம் போலீசார் சார்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளிடையே பேசும்போதுதாங்கள் படிக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் அந்தந்த பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தினர். இதில், கொங்கு பாளையம் ஊராட்சி தலைவர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.