வேளாண் குறித்து வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு


வேளாண் குறித்து வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு
x

வேளாண் குறித்து வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு நடைபெற்றது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள வடசேரி சமுதாய கூடத்தில் வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு வடசேரி கிராம நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமை தாங்கினார். முகாமில் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை உள்பட 13 துறைகளில் இருந்து தமிழ்நாடு அரசு அளித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் பதிவு செய்ய ஏதுவாக வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்களது நில விவரங்களுடன் விவசாயிகளின், விவரங்களையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதில், வருவாய்துறை உதவியாளர் அம்பிகாபதி உள்பட விவசாயிகள் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.


Next Story