மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு
மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு நடந்தது.
கரூர்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடமாடும் மண் பரிசோதனை மற்றும் மண் ஆய்வு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு உதவி வேளாண்மை அலுவலர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ஸ்ரீபிரியா முன்னிலை வைத்தார். முகாமில் ரங்கநாதபுரம், கட்டளை பகுதி விவசாயிகளுக்கு மண் ஆய்வின் முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முடிவில் மண் பரிசோதனை நிலைய உதவி வேளாண்மை அலுவலர் தரண்யா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story