போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு


போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
x

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை போலீஸ் நிலையம் முன் மற்றும் ராயம்புரம், பொய்யாதநல்லூர், பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுவிலக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் பங்கேற்று மதுவினால் ஏற்படும் தீமைகள், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தப்பாட்டம், பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கலால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், வருவாய் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் பஸ் நிலையம் மற்றும் அண்ணாநகர் பிரிவு சாலையிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story